இறுதி குறிப்பு / ஒப்புகை

இறுதி குறிப்பு (End Note)

ஸ்க்ரம் இலவசமாக இந்த வழிகாட்டியில் வழங்கப்படுகிறது. இங்கே கோடிட்டு காட்டப்பட்டுள்ள படி, ஸ்க்ரம் கட்டமைப்பு மாறாது. ஸ்க்ரமின் சில பகுதிகளை மட்டுமே செயல்படுத்த முடியும், ஆனால் இதன் விளைவாக உருவானது ஸ்க்ரம் ஆகாது. மாறாக ஸ்க்ரம் முழுமையாக மட்டுமே செயல்படுத்த முடியும். ஸ்க்ரம் மற்ற நுட்பங்கள், முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கான கொள்கலனாக செயல்படுகிறது.

ஒப்புகை (Acknowledgements)

மக்கள் (People)

ஸ்க்ரமுக்கு பங்களித்த ஆயிரக்கணக்கான மக்களின், தொடக்கத்தில் கருவியாக இருந்தவர்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். ஜெஃப் சதர்லேண்ட், ஜெஃப் கென்னா மற்றும் ஜான் ஸ்கம்ணியோடெல்சுடன் பணிபுரிந்தார். மேலும், கென் ஸ்சவாபர், மைக் ஸ்மித் மற்றும் மார்டினுடன் பணிபுரிந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் பலர் பங்களித்தனர் மற்றும் அவர்களின் உதவியின்றி ஸ்க்ரம் இன்று உள்ளதைப்போல் மாறியிருக்காது.

ஸ்க்ரம் வழிகாட்டியின் வரலாறு (Scrum Guide History)

கென் ஸ்சவாபர் மற்றும் ஜெஃப் சதர்லேண்ட் முதன்முதலில் 1995 இல் OOPSLA மாநாட்டில் ஸ்க்ரமை இணைந்து வழங்கினார். முந்தைய சில ஆண்டுகளில், கென் மற்றும் ஜெஃப் பெற்ற கற்றலை ஆவணப்படுத்தி ஸ்க்ரமின் முதல் வரையறையை வெளியிட்டனர்.

ஸ்க்ரம் வழிகாட்டியானது ஜெஃப் சதர்லேண்ட் மற்றும் கென் ஸ்சவாபர் ஆகியோரால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. மற்ற வடிவங்கள், செயல்முறைகள், நுண்ணறிவுகள் ஸ்க்ரம் வழிகாட்டியை முழுமைப்படுத்துகின்றன. இவை உற்பத்தித்திறன், மதிப்பு, படைப்பாற்றல் மற்றும் முடிவுகளின் மனநிறைவை அதிகரிக்கலாம்.

ஸ்க்ரமின் முழுமையான வரலாறு வேறு இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. முயற்சித்த மற்றும் நிப்பிக்கப்பட்ட முதல் இடங்களை அடையாளம் காண்கிறோம் – இண்டிவிச்சுவல் இன்க்., நியூஸ்பேஜ், பிடெலிட்டி இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஐடிக்ஸ் (இப்போது ஜிஇ மெடிகல்).

மொழிபெயர்ப்பு ஒப்புகை (Translation Acknowledgement)

மேலே ஒப்புக்கொள்ளப்பட்ட டெவலப்பர்களால் வழங்கப்பட்ட அசல் ஆங்கிலப் பதிப்பிலிருந்து இந்த வழிகாட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புக்கு பங்களித்தவர் ‘ஜெயகணேஷ் நாராயணசுவாமி’.

தொடர்பு தகவல் (Contact Information):

§