ஸ்க்ரம் கையேட்டின் நோக்கம்  

நாங்கள் 1990-களில் முற்பகுதியில் ஸ்க்ரம்மை உருவாக்கினோம். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஸ்க்ரம்மை கையேட்டின் முதல் பதிப்பை நாங்கள் எழுதினோம். சிறிய, மற்றும் செயல்பாட்டு புதுப்பிகள் மூலம் நாங்கள் இந்த கையேட்டை உருவாக்கியுள்ளோம். நாங்கள் ஒருங்கிணைந்து இதன் பின்னால் நிற்கிறோம்.

ஸ்க்ரம் கையேட்டில் ஸ்க்ரம் வரையறை உள்ளது. இந்த கட்டமைப்பின் ஒவ்வொரு கூறுகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உதவுகிறது. இது ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் ஸ்க்ரம் மூலம் உணரப்பட்ட முடிவுகளுக்கு அவசியம் ஆகும். ஸ்க்ரம்மின் முக்கிய வடியமைப்பு அல்லது யோசனைகளை மாற்றுவது, கூறுகளை விட்டு வெளியேறுவது அல்லது ஸ்க்ரம்மின் விதிகளை பின்பற்றாதது, நிறைவுறா நிலையை கொடுக்கும் – இவை ஸ்க்ரம்மை பயன்யற்றதாக மாற்றிவிடும்.

வளர்ந்து வரும் சிக்கலான உலகத்திற்குள் ஸ்க்ரம் பயன்பாட்டை நாங்கள் பின்பற்றுகிறோம். ஸ்க்ரம் அதனுடைய அடிப்படையினை கொண்ட மென்பொருள் தயாரிப்பிற்கு அப்பால், ஸ்க்ரம் சிக்கலான வேலை கொண்டிருக்கும் பல களங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதை கண்டு நாங்கள் தாழ்மையடைகிறோம். ஸ்க்ரம்மின் பயன்பாடு பரவும்போது, மென்பொருள் தயாரிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பிற நிபுணர்கள் வேலை செய்கிறாரகள் – இதனால் நாங்கள் டெவலப்பர்கள் என்ற வார்த்தையை எவரையும் தவிர்ப்பதற்காக அல்ல எளிமைப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். நீங்கள் ஸ்க்ரம்மில் இருந்து மதிப்பு பெற்றால் நீங்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஸ்க்ரம் பயன்படுத்தும்போது, இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி ஸ்க்ரம் கட்டமைப்பிற்கு ஏற்ற வடிவங்கள், செயல்முறைகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படலாம். அவற்றின் விளக்கம் ஸ்க்ரம் கையேட்டின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. ஏன்னெனில், அவை சூழல் உணர்திறன் கொண்டவை ஆகும். இவை ஸ்க்ரம் பயன்பாடுகளுக்கு இடையே பரவலாக வேறுபடுகின்றன. ஸ்க்ரம்  கட்டமைப்பிற்குள் பயன்படுத்துவத்திற்கான இத்தகைய நுட்பங்கள் பரவலாக வேறுபடுகின்றன – இவை வேறுபல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

கென் ஸ்சவாபர் & ஜெஃப் சதர்லேண்ட் ஜூலை 2020

§