ஸ்க்ரம் ஆவணங்கள்

ஸ்க்ரம் ஆவணங்கள் வேலை அல்லது மதிப்பை குறிக்கின்றன. அவை முக்கிய தகவல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை ஆய்வு செய்யும் ஒவ்வொருவருக்கும் இதை ஒத்தி வரும் தழுவல்களும் ஒரே அடிப்படையை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு ஆவணமும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் தகவலை வழங்குவதை உறுதி செய்வதற்கான வாக்குறுதியை கொண்டுள்ளது இதனால் முன்னேற்றத்தை அளவிட முடியும்:

  • பிராடக்ட் பேக்லாகுக்கு பிராடக்ட் கோல்
  • ஸ்பிரிண்ட் பேக்லாகுக்கு ஸ்பிரிண்ட் கோல்
  • இன்கிரிமென்டுக்கு டெபினிஷன் ஒப் டன்

இந்த வாக்குறுதிகள் ஸ்க்ரம் டீம் மற்றும் அவர்களின் பங்குதாரர்களுக்கான அனுபவவாதம் (எம்ப்ரிசிசம்) மற்றும் ஸ்க்ரம் மதிப்புகளை வலுப்படுத்துவதற்காக உள்ளன.

பிராடக்ட் பேக்லாக் (Product Backlog)

பிராடக்ட் பேக்லாக் என்பது பிராடக்ட்டை மேம்படுத்த தேவையான எழுநிலை மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பட்டியலாகும். இது ஸ்க்ரம் டீமால் மேற்கொள்ளபப்டும் வேலைக்கான ஒரே ஆதாரம் ஆகும்.

ஒரு ஸ்பிரிண்ட்டிற்குள் ஸ்க்ரம் டீமால் செய்யக்கூடிய பிராடக்ட் பேக்லாக் பொருட்கள் ஒரு ஸ்பிரிண்ட் பிளானிங் நிகழ்விற்கு தயாராக இருப்பதாக கருதப்படுகிறது. இவர்கள் செப்பனிடும் நிகழ்வுகளுக்குப்பின் இத்தகைய வெளிப்படைத்தன்மையை பெறுகிறார்கள். பிராடக்ட் பேக்லாக் ரிபைண்மென்ட் என்பது பிராடக்ட் பேக்லாக் பொருட்களை சிறியதாக வரையறுக்கும் செயலாகும். இது விளக்கம், விவரிப்பு, வரிசை மற்றும் அளவு போன்ற விவரங்களை சேர்க்க ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக விளங்குகிறது. பண்புக்கூறுகள் பெரும்பாலும் வேலையின் களத்தை பொறுத்து மாறுபடும்.

வேலை செய்யும் டெவலப்பர்கள் அளவிடுவதற்கும் மற்றும் மதிப்பிடுவதற்கும் பொறுப்பாவார்கள். பிராடக்ட் ஓனர், புரிந்துகொள்ளவும் தேர்வு செய்யவும் டெவலப்பர்களுக்கு உதவுகிறார்.

வாக்குறுதி: பிராடக்ட் கோல் (Commitment: Product Goal)

பிராடக்ட் கோல் – ஒரு பிராடக்டின் எதிர்கால நிலையை விவரிக்கிறது. இது ஸ்க்ரம் டீமுக்கு திட்டமிடுவதற்கு இலக்காக செயல்படும். பிராடக்ட் கோல், பிராடக்ட் பேக்லாக்கின் ஒரு அங்கமாக திகழ்கிறது. மீதமுள்ள பிராடக்ட் பேக்லாக் “எவை” பிராடக்ட் கோலை முழுமைப்படுத்தும் என்பதை விவரிக்கிறது.

பிராடக்ட் என்பது மதிப்பை வழங்குவதற்கான ஒரு ஊடகம். இது ஒரு தெளிவான வரம்பு, தெரிந்த பங்குதாரர்கள், நன்கு வரையறுக்கப்பட்ட பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பிராடக்ட் ஒரு வன்பொருள் அல்லது மனதால் மட்டும் எண்ணக்கூடியதாக.

பிராடக்ட் கோல் என்பது ஸ்க்ரம் டீமிற்கான நீண்ட கால நோக்கமாகும். அடுத்த குறிக்கோளை எடுப்பதற்கு முன் அவர்கள் தற்போதைய குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் (அல்லது கைவிட வேண்டும்).

ஸ்பிரிண்ட் பேக்லாக் (Sprint Backlog)

ஸ்பிரிண்ட் கோல் (ஏன்), ஸ்பிரிண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட பிராடக்ட் பேக்லாக் பொருட்கள் (என்ன), அத்துடன் இன்கிரிமென்ட் அளிப்பதற்கான ஒரு செயல் திட்டம் (எப்படி) – இவை அனைத்தையும் ஸ்பிரிண்ட் பேக்லாக் உள்ளடக்கும்.

ஸ்பிரிண்ட் பேக்லாக் டெவெலப்பர்களால், டெவெலப்பர்களுக்கான வரையறுக்கப்பட்ட திட்டமாகும். ஸ்பிரிண்ட் கோலை அடைய டெவெலப்பர்கள் ஸ்பிரிண்டின் பொது செய்ய திட்டமிட்டுள்ள வேலையின் உயர் தெரிவுநிலை மிகத்தெளிவாக தெறியும் நிகழ்நேர உதாரணம் இதுவாகும். இதன் விளைவாக, மேலும் அறியப்படும் போது ஸ்பிரிண்ட் பேக்லாக், ஸ்பிரிண்ட் முழுவதும் புதுப்பிக்கப்படுகிறது. ஸ்பிரிண்ட் பேக்லாகில் டெய்லி ஸ்க்ரமின்போது டெவெலப்பர்கள் தங்கள் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய போதுமான விவரங்கள் இருக்க வேண்டும்.

வாக்குறுதி: ஸ்பிரிண்ட் கோல் (Commitment: Sprint Goal)

ஸ்பிரிண்ட் கோல் என்பது ஸ்பிரிண்டிற்கான ஒரே நோக்கம். ஸ்பிரிண்ட் கோல் டெவெலப்பர்களின் வாக்குறுதி என்றாலும் இது நெகிழும் தன்மையை வழங்குகிறது. ஸ்பிரிண்ட் கோல் ஒத்திசைவையும், கவனத்தையும் உருவாக்கி தனிமுயற்சிகள் செய்வதை விட ஒன்றாக வேலை செய்ய ஸ்க்ரம் டீமை ஊக்குவிக்கிறது.

ஸ்பிரிண்ட் பிளானிங் நிகழ்வின் போது ஸ்பிரிண்ட் கோல் உருவாக்கப்பட்டு பின்னர் ஸ்பிரிண்ட் பேக்லாக்கில் சேர்க்கப்படுகிறது. ஸ்பிரிண்டின் போது டெவெலப்பர்கள் வேலை செய்வதால், அவர்கள் ஸ்பிரிண்ட் கோலை மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததை விட வேலை வித்தியாசமாக மாறினால், ஸ்பிரிண்ட் கோலை பாதிக்காமல் ஸ்பிரிண்ட்டிற்குள் ஸ்பிரிண்ட் பேக்லாக்கின் வாய்ப்பளவை பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ப்ராடக்ட் ஓனருடன் ஒத்துழைக்கிறார்கள்.

இன்கிரிமென்ட் (Increment)

ஒரு இன்கிரிமென்ட் என்பது பிராடக்ட் கோலை நோக்கிய ஒரு உறுதியான முன்னேற்றம் ஆகும். ஒவ்வொரு இன்கிரிமென்ட்டும் அனைத்து முந்தைய இன்கிரிமென்ட்களும் ஒன்றாக வேலை செய்வதை உறுதி செய்யப்படுகிறது. மதிப்பினை வழங்குவதர்க்கு இன்கிரிமென்ட் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

ஒரு ஸ்பிரிண்ட்டிற்குள் பல இன்கிரிமென்ட்கள் உருவாக்கப்படலாம். இன்கிரிமென்ட்களின்தொகை ஸ்பிரிண்ட் ரிவியூவில் வழங்கப்படுகிறது. இது எம்பிரிசிசத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், ஸ்பிரிண்ட் முடிவதற்கு முன்பாகவே பங்குதாரர்களுக்கு இன்கிரிமென்ட் வழங்கப்படலாம். ஸ்பிரிண்ட் ரிவியூ மதிப்பை வழங்குவதற்கு தடையாக ஒருபோதும் கருதக்கூடாது.

டெவெலப்பர்கள் செய்யும் வேலை டெபினிசன் அப் டன் என்ற வரையறையை பூர்த்தி செய்யாத வரை இன்கிரிமென்டின் ஒரு பகுதியாக கருத முடியாது.

வாக்குறுதி: டெபினிசன் அப் டன் (Commitment: Definition of Done)

டெபினிசன் அப் டன் என்பது இன்கிரிமென்ட் நிலை குறித்து, பிராடக்ட்டுக்கு தேவையான தர அளவீடுகளை முறைசார் வேண்டிய முறைசார் பட்டியல் ஆகும்.

ஒரு பிராடக்ட் பேக்லாக் பொருள், டெபினிசன் அப் டன் என்ற வரையறையை திருப்திப்படுத்தும் தருணத்தில் ஒரு இன்கிரிமென்ட் பிறக்கிறது.

இன்கிரிமென்ட் பகுதியாக என்ன வேலை முடிந்தது என்பது பற்றிய பகிரப்பட்ட புரிதலை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மையை “டெபினிசன் அப் டன்” உருவாக்குகிறது. ஒரு பிராடக்ட் பேக்லாக் பொருள், டெபினிசன் அப் டன் என்ற வரையறையை பூர்த்தி செய்யவில்லை என்றால், அதை வெளியிடவோ அல்லது ஸ்பிரிண்ட் ரிவியூவில் கூட காட்ட முடியாது. அதற்கு பதிலாக இது எதிர்கால பரிசீலைனைக்கு பிராடக்ட் பேக்லாக்குக்கு திரும்பும்.

இன்கிரிமென்ட்டிற்கான டெபினிசன் அப் டன் என்ற வரையறை நிறுவனத்தின் தரத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அனைத்து ஸ்க்ரம் டீமும் அதை குறைந்தபட்சமாக பின்பற்ற வேண்டும். இது ஒரு நிறுவனத்தின் தரமாக இல்லாவிட்டால், ஸ்க்ரம் டீம் பிராடக்ட்-கு ஏற்ற டெபினிசன் அப் டன் என்ற வரையறையை உருவாக்க வேண்டும்.

டெவெலப்பர்கள் டெபினிசன் அப் டன் என்ற வரையறைக்கு உடன்பட வேண்டும். ஒரு பிராடக்ட்டிற்காக பல ஸ்க்ரம் டீம்கள் ஒன்றாக வேலை செய்தால், அவை டெபினிசன் அப் டன் நியமங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

§