ஸ்க்ரம் வரையறை

ஸ்க்ரம் ஒரு இலகுரக கட்டமைப்பாகும். இது சிக்கலுக்கான தகவமைப்பு தீர்வுகள் மூலம் மக்கள், அணிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மதிப்பை உருவாக்க உதவுகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால், ஸ்க்ரம் ஒரு சூழலை வளர்க்க ஒரு ஸ்க்ரம் மாஸ்டர் தேவைப்படுகிறார்:

  1. ஒரு ப்ராடக்ட் ஓனர் ஒரு சிக்கலான சிக்கலுக்கான வேலையை ஒரு ப்ராடக்ட் பேக்லாகில் ஒழுங்குபடுத்துகிறார்
  2. ஸ்க்ரம் டீம் ஒரு ஸ்பிரிண்டின் போது தேர்வான வேலையை மதிப்பு அதிகரிப்பாக (இன்க்ரீமெண்ட்) மாற்றுகிறது
  3. ஸ்க்ரம் டீம் மற்றும் அதன் பங்குதாரர்கள் முடிவுகளை ஆய்வு செய்து அடுத்த ஸ்பிரிண்ட்டிற்குத்  தக்கவாறு அமைத்துக்கொள்கிறார்கள்
  4. மீண்டும் செய்க

ஸ்க்ரம் எளிதானது. இதனை முயற்சி செய்து அதன் தத்துவம், கோட்பாடு மற்றும் அமைப்பு, இலக்குகளை அடைய மற்றும் மதிப்பை உருவாக்க உதவுகிறதா என்பதை தீர்மானிக்கவும். ஸ்க்ரம் கட்டமைப்பானது வேண்டுமென்றே முழுமையற்றது. ஸ்க்ரம் கோட்பாட்டை செயல்படுத்த தேவையான பகுதிகளை மட்டுமே வரையறுக்கிறது. ஸ்க்ரம் அதைப் பயன்படுத்தும் மக்களில் கூட்டு நுண்ணறிவின்மேல் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு விரிவான வழிமுறைகளை வழங்குவதற்குப் பதிலாக, ஸ்க்ரம் விதிகள் அவர்களின் உறவுகள் மற்றும் தொடர்புகளை வழிநடத்துகின்றன.

கட்டமைப்பிற்குள் பல்வேறு செயல்முறைகள், நுட்பங்கள் மற்றும் முறைகள் பயன்படுத்தலாம். ஸ்க்ரம் தற்போதுள்ள நடைமுறைகளைச் சுற்றி செயல்படுகிறது அல்லது அவற்றை தேவையற்றதாக ஆக்குகிறது. ஸ்க்ரம் தற்போதைய மேலாண்மை, சுற்றுசூழல் மற்றும் வேலை நுட்பங்களின் ஒப்பிட்டு செயல்திறனைப் பார்க்க வைக்கிறது – இதனால் மேம்பாடுகளைச் செய்ய முடியும்.

§