ஸ்பிரிட்ண் மற்ற எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு கொள்கலன் நிகழ்வாக திகழ்கிறது. ஸ்க்ரமில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் ஸ்க்ரம் ஆவணங்களை ஆய்வு செய்து மாற்றியமைப்பதற்கான முறையான வாய்ப்பாகும். இந்த நிகழ்வுகள் தேவையான வெளிப்படைத்தன்மையை செயல்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட முடிவுகளின் படி, நிகழ்வுகளை இயக்கத் தவறினால் ஆய்வு மற்றும் மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும் நிகழ்வுகளை ஸ்க்ரமில் ஒழுங்காக உருவாக்கவும் மற்றும் வரையறுக்கப்படாத கூட்டங்களில் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது. எளிமையாகவும், சிக்கலை குறைக்கவும் அனைத்து நிகழ்வுகளின் ஒரே நேரத்தில் மற்றும் இடத்தில நடத்தப்படுகின்றன.
ஸ்பிரிண்ட் (The Sprint)
ஸ்பிரிண்ட்ஸ் என்பது ஸ்க்ரமின் இதயத் துடிப்பாகத் திகழ்கிறது. அங்கே எண்ணங்கள் மதிப்பாக மாற்றப்படுகின்றன.
நிலைத்தன்மையை உருவாக்க அவை ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான நடத்தப்படுகின்றன. முந்தைய ஸ்பிரிண்ட் முடிந்தவுடன் ஒரு புதிய ஸ்பிரிண்ட் தொடந்துகிறது.
ஸ்பிரிண்ட் பிளானிங், டெய்லி ஸ்க்ரம்ஸ், ஸ்பிரிண்ட் ரெவியூ மற்றும் ரெட்ரோஸ்பெக்ட்டிவ் உள்ளிட்ட நிகழ்வுகள் பிராடக்ட் கோலை அடைய தேவையான அனைத்து வேலைகளும் ஸ்பிரிண்ட்டிற்குள் நடக்கும்.
ஸ்பிரிண்டின் போது:
- ஸ்பிரிண்ட் கோலுக்கு இட்ருண்டாக்கம் ஏற்படுத்தும் எந்த மாற்றங்களும்;
- தரம் குறையாது;
- பிராடக்ட் பேக்லாக் தேவைக்கேற்ப ஒழுகலாராகப்படுகிறது; மற்றும்,
- தவைகளை பற்றி கற்றுக்கொண்டால் பிராடக்ட் ஓனருடன் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டு மீண்டும் மறுபரீலனை செய்யலாம்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு தரப்பின் இலக்கை நோக்கி ஆய்வு மற்றும் தழுவல்கள் உறுதி செய்வதன் மூலம் ஸ்பிரிட்ஸ் முன்கணிப்பை செயல்படுத்துகிறது. ஒரு ஸ்பிரிண்டின் அளவு மிக நீளமாக இருக்கும்போது ஸ்பிரிண்ட் கோல் செல்லாததாகிவிடும். இதனால் சிக்கல் மற்றும் இடர்களை அதிகரிக்கலாம். எனவே, அதிக கற்றலை உருவாக்க குறிகிய ஸ்பிரிண்ட்களைப் பயன்படுத்தி, செலவு மற்றும் மறையிடர்களை ஒரு சிறிய கால எல்லைக்குள் கட்டுப்படுத்துங்கள்.
ஒவ்வொரு ஸ்பிரிண்டும் ஒரு குறுகிய திட்டணியாக கருதப்படலாம். முன்னேற்றத்தை முன்னறிவிப்பதற்காக பலவேறு நடைமுறைகள் உள்ளன – பரண்-டவுன் (Burndown), பரண்-உப்(Burn-up), அல்லது குமுலேடிவ் பிலௌஸ்(Cumulative flows). இவை பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், அனுபவவாதத்தின் முக்கியத்துவத்தின் மாற்றாது.
சிக்கலான சூழலில் என்ன நடக்கும் என்பது தெரியாது, முன்னதாக நடந்தவை மட்டுமே எதிர்நோக்கு முடிவு எடுத்தல்களுக்கு பயன்படும்.
ஸ்பிரிண்ட் கோல் வழக்கற்றுபோனால், அந்த ஸ்பிரிண்ட் ரத்து செய்யலாம். ப்ராடக்ட் ஓனருக்கு மட்டுமே ஸ்பிரிண்டை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது.
ஸ்பிரிண்ட் பிளானிங் (Sprint Planning)
ஸ்பிரிண்ட் பிளானிங் ஸ்பிரிண்ட்டிற்கு செய்ய வேண்டிய வேலையை அமைப்பதன் மூலம் ஸ்பிரிண்ட் முன்னெடுக்கிறது. இதன் விளைவாக வரும் திட்டம் முழு ஸ்க்ரம் டீமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்படுகிறது.
ஸ்பிரிண்டிற்குச் செய்ய வேண்டிய வேலையைத் திட்டமிடுவதன் மூலம் ஸ்பிரிண்ட் தொடங்குகிறது. இந்தத் திட்டம் முழு ஸ்க்ரம் குழுவின் கூட்டுப் பணியால் உருவாக்கப்பட்டது.
மிக முக்கியமான பிராடக்ட் பேக்லாக் பொருட்கள் மற்றும் ப்ராடக்ட் கோல் எவ்வாறு இணைகின்றன என்பதை பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதை ப்ராடக்ட் ஓனர் உறுதிசெய்கிறார். ஸ்பிரிண்ட் டீமிற்கு ஆலோசனை வழங்க ஸ்பிரிண்ட் பிளானிங்கின்போது தேவகேர்ப்ப மற்றவர்களை அழைக்கலாம்.
ஸ்பிரிண்ட் பிளானிங் பின்வரும் தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது:
தலைப்பு ஒன்று: இந்த ஸ்பிரிண்ட் ஏன் மதிப்புமிக்கது?
இப்போதைய ஸ்பிரிண்டின் ப்ராடக்ட் அதன் மதிப்பு மற்றும் பயன்பாட்டை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை ப்ராடக்ட் ஓனர் முன்மொழிகிறார்.
பங்குதாரர்களுக்கு ஸ்பிரிண்ட் ஏன் மதிப்புமிக்கது என்பதை தெரிவிக்கும் ஸ்பிரிண்ட் கோலை வரையறுக்க முழு ஸ்க்ரம் டீமும் ஒத்துழைக்கிறது. ஸ்பிரிண்ட் பிளானிங் முடிவதற்கு முன்பு ஸ்பிரிண்ட் கோல் உறுதி செய்யப்பட வேண்டும்.
தலைப்பு இரண்டு: இந்த ஸ்பிரிண்டில் என்ன செய்ய முடியும்?
ப்ராடக்ட் ஓனருடனான கலந்துரையாடல் மூலம் டெவலப்பர்கள் தற்போதைய ஸ்பிரிண்டில் சேர்க்க பிராடக்ட் பேக்லாகில் இருந்து பொருட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஸ்பிரிண்ட் பிளானிங் போது, ஸ்க்ரம் டீம் இந்த பொருட்களை செம்மைப்படுத்தி ஒழுங்கு படுத்தலாம் – இது புரிதலையும், நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
ஒரு ஸ்பிரிண்டிற்குள் எவ்வளவு முடிக்க முடியும் என்பதை தேந்தெடுப்பது சவாலாக இருக்கலாம். இருப்பினும் டெவலப்பர்கள் தங்கள் கடந்தகால செயல்திறன், வரவிருக்கும் கொள்ளளவு மற்றும் டெபினிஷன் ஒப் டன் என்ற வரையறை பற்றி எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்கு ஸ்பிரிண்ட் முன்கணிப்பிகளில் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
தலைப்பு மூன்று: தேர்தடுக்கப்பட்ட வேலை எவ்வாறு செய்யப்படும்?
தேர்தடுக்கப்பட்ட ஒவ்வொரு பிராடக்ட் பேக்லாக் பொருட்களுக்கும், டெவலப்பர்கள் டெபினிஷன் ஒப் டன் என்ற வரையறையை பூர்த்தி செய்யும் இன்கிரிமென்ட்டை உருவாக்க தேவையான வேலைகளை திட்டமிடுகிறார்கள். இது பெரும்பாலும் பிராடக்ட் பேக்லாக் பொருட்களை ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான சிறிய பொருளாக பிளவுபடுத்தப்படுகின்றன.
இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது டெவலப்பர்களின் தனிப்பட்ட முடிவாகிறது. பிராடக்ட் பேக்லாக் பொருட்களை எவ்வாறு மதிப்புமிக்க இன்கிரிமென்ட்களாக மாற்றுவது என்பதை டெவலப்பர்களுக்கு வேறுயாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.
ஸ்பிரிண்ட் கோல் ஸ்பிரிண்டிற்கு தேர்தெடுக்கபப்ட்ட பிராடக்ட் பேக்லாக் பொருட்கள், மேலும் அவற்றை பணியாற்றுவதற்கான திட்டம் ஆகிய அனைத்தும் ஸ்பிரிண்ட் பேக்லாக் என குறிப்பிடப்படுகின்றன.
ஸ்பிரிண்ட் பேக்லாக் ஒரு மாத ஸ்பிரிண்டிற்கு அதிகபட்சம் எட்டு மணி நேரம் காலவரம்புக்குள் நடத்தபப்டுகிறது. குறுகிய ஸ்பிரிண்ட்களுக்கு இந்த நிகழ்வு பொதுவாக குறுகியதாகவே இருக்கும்.
டெய்லி ஸ்க்ரம் (Daily Scrum)
டெய்லி ஸ்க்ரமின் நோக்கம் ஸ்பிரிண்ட் கோல் நோக்கிய முன்னேற்றத்தை ஆராய்ந்து, ஸ்பிரிண்ட் ஸ்பிரிண்ட் பேக்லாக்கினை தேவைக்கேற்ப மாற்றியமைத்து, வரவிருக்கும் திட்டமிட்ட வேலையை சரிசெய்தல் ஆகும்.
டெய்லி ஸ்க்ரம் என்பது ஸ்க்ரம் அணியின் டெவெலப்பர்களுக்கான 15 நிமிட நிகழ்வு ஆகும், இது ஸ்பிரிண்டின் ஒவ்வொரு வேலை நாளிலும் சிக்கலைக் குறைக்க ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. பிராடக்ட் ஓனர் அல்லது ஸ்க்ரம் மாஸ்டர் ஸ்பிரிண்ட் பேக்லாக் உள்ள பொருட்களில் வேலை செய்தால், அவர்கள் டெவெலப்பர்களாக பங்கேற்கிறார்கள்.
டெவலப்பர்கள் அவர்கள் விரும்பும் எந்த அமைப்பையும் நுட்பங்களையும் தேர்ந்தெடுக்கலாம். டெய்லி ஸ்க்ரம் ஸ்பிரிண்ட் கோலை நோக்கி முன்னேறுவதில் கவனம் செலுத்தி, அடுத்த நாள் வேலைக்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்குகிறது இது கவனத்தை உருவாக்குகிறது மற்றும் தன்மேலாண்மையை மேம்படுத்துகிறது.
டெய்லி ஸ்க்ரம் வாயிலாக கருத்துப்பரிமாற்றங்கள் மேம்படுத்தப்படுகின்றது; தடைகள் அடையாளம் காணப்படுகிறது, விரைவாக தீர்வுகாணுவதை ஊக்குவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக மற்ற கூட்டங்களின் தேவை நீக்கப்படுகின்றது.
டெய்லி ஸ்க்ரம் டெவலப்பர்கள் தங்கள் திட்டத்தை தக்கவாறு அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒரே நேரம் அல்ல. ஸ்பிரிண்டின் மீதமுள்ள வேலைகளை மாற்றியமைப்பது அல்லது மருதிட்டமிடல் பற்றிய விரிவான விவாதங்களுக்கு அவர்கள் நாள் முழுவதும் அடிக்கடி சந்திக்கிறார்கள்.
ஸ்பிரிண்ட் ரிவியூ (Sprint Review)
ஸ்பிரிண்ட் ரிவியூவின் நோக்கம் ஸ்பிரிண்டின் முடிவுகளை ஆய்வு செய்து எதிர்கால தழுவல்களை தீர்மானிப்பதாகும். ஸ்க்ரம் டீம் முக்கிய பங்குதாரர்களுக்கு அவர்களின் பணியின் முடிவுகளை காண்பிக்கிறார்கள் மற்றும் பிராடக்ட் கோல் நோக்கிய முன்னேற்றத்தை விவாதிக்கிறார்கள்.
இந்த நிகழ்வின் போது, ஸ்க்ரம் டீம் மற்றும் பங்குதாரர்களால் ஸ்பிரிண்டில் என்ன சாதிக்கப்பட்டது மற்றும் அவர்களில் சூழலில் என்ன மாறியது என்பதை ஆய்வு செய்கிறார்கள். இந்த தகவலின் அடிப்படையில் கூட்டுமுயற்சியாக பங்கேற்பாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கிறார்கள். புதிய வாய்ப்புகளை சந்திக்க பிராடக்ட் பேக்லாக் ஒழுங்குபடுத்தப் படலாம். ஸ்பிரிண்ட் ரிவியூ ஒரு வேலை அமர்வு, எனவே ஸ்க்ரம் டீம் அதை காட்சியளிப்பிற்குள் கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஸ்பிரிண்ட் ரிவியூ, ஸ்பிரிண்ட் ரெட்ரோஸ்பெக்ட்டிவிற்கு முன்னதாக நடக்கும் ஒரு நிகழ்வு ஒரு மாத ஸ்பிரிண்டிற்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் கலக்கட்டுக்குள் நிகழ்கிறது. குறுகிய ஸ்பிரிண்ட்களுக்கு இந்த நிகழ்வு குறுகியதாக இருக்கும்.
ஸ்பிரிண்ட் ரெட்ரோஸ்பெக்ட்டிவ் (Sprint Retrospective)
ஸ்பிரிண்ட் ரெட்ரோஸ்பெக்ட்டிவின் நோக்கம் தரம் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான வழிகளை திட்டமிடுவதாகும்.
தனிநபர்கள், தொடர்புகள், செயல்முறைகள், கருவிகள் மற்றும் டெபினிஷன் ஒப் டன் என்ற வரையறை குறித்து ஸ்பிரிண்ட் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை ஸ்க்ரம் டீம் ஆய்வு செயகிறது. பரிசோதிகப்பட்ட கூறுகள் பெரும்பாலும் வேலையின் களத்தை பொறுத்து மாறுபடும். அவர்களை வழிதவற செய்த அனுமானங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் தோற்றம் ஆராயப்படுகிறது. ஸ்பிரிண்டின் போது எது நல்லதாக நடந்தது, சந்தித்த பிரச்சனைகள் என்ன, அல்லது அந்த பிரச்சனைகள் எப்படி தீர்க்கப்பட்டன (அல்லது தீர்க்கப்படவில்லை) என்று ஸ்க்ரம் டீம் விவாதிக்கிறது.
ஸ்க்ரம் டீம் அதன் செயல்திறனை மேம்படுத்த மிகவும் பயனுள்ள மாற்றங்களை அடையாளம் காண்கிறது. மிகவும் பயனுள்ள முன்னேற்றங்களை விரைவில் தீர்க்கப்படுகின்றன. இந்த முன்னேற்றங்கள் பிராடக்ட் பேக்லாக் பொருட்கலாக அடுத்த ஸ்பிரிண்டின் ஸ்பிரிண்ட் பேக்லாகில் சேர்க்கப்படலாம்.
ஸ்பிரிண்ட் ரெட்ரோஸ்பெக்டிவுடன் ஸ்பிரிண்ட் முடிகிறது. ஒரு மாத ஸ்பிரிண்டிற்கு அதிகபட்சமாக மூன்று மணிநேரம் காலகட்டுக்குள் நிகழ்கிறது. குறுகிய ஸ்பிரிண்ட்களுக்கு, பொதுவாக குறுகியதாக இருக்கும்.