ஸ்க்ரம் டீம்

ஸ்க்ரமின் அடிப்படை ஒரு சிறிய அணி ஆகும். இந்த அணியில் ஒரு ஸ்க்ரம் மாஸ்டர், ஒரு ப்ராடக்ட் ஓனர் மற்றும் டெவலப்பர்கள் உள்ளனர். ஒரு ஸ்க்ரம் டீமிற்குள், துணை அணிகள் அல்லது படிநிலைகள் இல்லை. இது ஒரு குறிக்கோளின் கவனம் செலுத்தும் நிபுணர்களின் ஒருங்கிணைந்த ப்ராடக்ட் கோல் ஆகும்.

ஸ்க்ரம் டீம் ஒரு கலைப்புச்செயற்பணி அணிகளாக திகழ்கின்றன. அதாவது, உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஸ்பிரிண்டின் மதிப்பை உருவாக்க தேவையான அனைத்து திறன்களையும் கொண்டுள்ளனர். ஸ்க்ரம் டீம் ஒரு தன்மேலாண்மைக்குழு – அதாவது யார் என்ன, எப்போது, எப்படி செய்கிறார்கள் என்பதை அவரகள் தமக்குள் தீர்மானிக்கிறார்கள்.

இந்த ஸ்க்ரம் டீம் ஒரு ஸ்பிரிண்ட்டிற்குள் வேகமாக இருக்கும் அளவுக்கு சிறியது மற்றும் குறிப்பிடத்தக்க வேலையை முடிக்க போதுமான அளவு பெரியது ஆகும், பொதுவாக 10 அல்லது குறைவான நபர்களை கொண்டிருக்கும். பொதுவாக, சிறிய அணிகள் சிறப்பாக தோளர்புகொள்வதையும் அதிக உற்பத்தித்திறன் கொண்டதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஸ்க்ரம் டீம்கள் மிகப்பெரியதாக மாறினால், ஒரே ப்ராடக்டில் கவனம் செலுத்துகின்ற – பல ஒருங்கிணைந்த ஸ்க்ரம் டீமாக மறுசீரமைக்கபட வேண்டும். எனவே, அணிகள் ஒரே ப்ராடக்ட் கோல் மற்றும் ப்ராடக்ட் ஓனரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பங்குதாரர் ஒத்துழைப்பு, சரிபார்ப்பு, செயல்பாடு, பரிசோதனை, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தேவைப்படக்கூடிய வேறுயேதேனும் ப்ராடக்ட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்க்ரம் பொறுப்பாகும். அவர்கள் தங்கள் வேலையை நிர்வகிக்க நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட மற்றும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். நிலையான வேகத்தில் ஸ்பிரிண்ட்டில் வேலை செய்வது ஸ்க்ரம் டீமின் கவனம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

ஒவ்வொரு ஸ்பிரிண்ட்டிலும் மதிப்புமிக்க, பயனுள்ள இன்கிரிமென்ட்டை உருவாக்குவதற்கு முழு ஸ்க்ரம் டீமும் பொறுப்பு ஆகும். ஸ்க்ரம் டீமில் உள்ள மூன்று குறிப்பிட்ட பொறுப்புகூறல்களை ஸ்க்ரம் வரையறுக்கிறது. அவை டெவலப்பர்ஸ், ப்ராடக்ட் ஓனர் மற்றும் ஸ்க்ரம் மாஸ்டர்.

டெவலப்பர்ஸ் (Developers)

டெவலப்பர்ஸ் ஸ்க்ரம் டீமில் ஒவ்வொரு ஸ்பிரிண்ட்டிலும் பயன்படுத்தக்கூடிய இன்கிரிமென்டின் எந்தவொரு அம்சத்தையும் உருவாக்க உறுதிபூண்டுள்ளவர்கள்.

டெவலப்பர்களுக்குத் தேவையான குறிப்பிட்ட திறன்கள் பெரும்பாலும் பரந்தவை மற்றும் வேலையின் களத்தை பொறுத்து மாறுபடும்:

  • ஸ்பிரிண்டிருக்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல் – ஸ்பிரிண்ட் பேக்லாக்;
  • டெபினிஷன் ஆப் டன் – என்ற வரையறையை கடைப்பிடிப்பதன் மூலம் தரத்தயை புகுத்துதல்;
  • ஸ்பிரிண்ட் கோல் நோக்கி ஒவ்வொரு நாளும் தங்கள் திட்டத்தை மாற்றியமைத்தல் மற்றும்;
  • தொழில் நெறிஞகர்களாக ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூறுகிறார்கள்.

பிராடக்ட் ஓனர் (Product Owner)

ஸ்க்ரம் டீமின் வேலையின் விளைவாக உற்பத்தியின் மதிப்பை அதிகரிப்பது பிராடக்ட் ஓனரின் பொறுப்பு ஆகும். இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது நிறுவனங்கள், ஸ்க்ரம் மக்கள் மற்றும் தனிநபர்களிடையே பரவலாக மாறுபடும்.

பயனுள்ள பிராடக்ட் பேக்லாக் மேலாண்மைக்கு பிராடக்ட் ஓனர் பொறுப்புக்கூற வேண்டும். இதில் பின்வரும் அனைத்தும் அடங்கும்:

  • பிராடக்ட் கோல் உருவாக்குதல் மற்றும் வெளிப்படையாகத் தெரிவித்தல்;
  • பிராடக்ட் பேக்லாக் பொருட்கள் உருவாக்குதல் மற்றும் தெளிவாக தொடர்புகொள்வது;
  • பிராடக்ட் பேக்லாக் பொருட்களை வரிசைப்படுத்தி ஒழுங்கு செய்தல் மற்றும்;
  • பிராடக்ட் பேக்லாக் வெளிப்படையாகவும் தெளிவாகவும் மற்றும் புரிந்துகொள்ளத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

பிராடக்ட் ஓனர் மேற்கண்ட வேலையைச் செய்யலாம் அல்லது மற்றவர்களுக்குப் பொறுப்பை ஒப்படைக்கலாம் இருந்தாலும், பிராடக்ட் ஓனர் மட்டுமே பொறுப்புக்கூறாக இருக்கிறார்.

பிராடக்ட் ஓனர்ஸ் வெற்றிபெற, முழு நிறுவனமும் அவர்களின் முடியுகளை மதிக்க வேண்டும். இந்த முடிவுகள் பிராடக்ட் பேக்லாகின் உள்ளடக்கத்திலும் வரிசைப்படுத்ததிலும் மற்றும் ஸ்ப்ரின்ட் ரெவியூவின் போது ஆய்வு செய்யக்கூடிய இன்கிரிமெண்ட் மூலம் தெரியும்.

பிராடக்ட் ஓனர் என்பவர் ஒரு நபர் ஆவார். மாறாக ஒரு குழு அல்ல. பிராடக்ட் ஓனர் பிராடக்ட் பேக்லாகில் பல பங்குதாரர்களின் தேவைகளை பிரதிநித்துவப்படுத்தலாம். பிராடக்ட் பேக்லாக்கை மாற்ற விரும்புபவர்கள் பிராடக்ட் ஓனரை மேய்ப்படுத்த செய்யலாம்.

ஸ்க்ரம் மாஸ்டர் (Scrum Master)

ஸ்க்ரம் வழிகாட்டியில் வரையறுக்கப்பட்ட படி, ஸ்க்ரமை நிறுவுவதற்கு ஸ்க்ரம் மாஸ்டர் பொறுப்பு ஆவார். ஸ்க்ரம் டீம் மற்றும் நிறுவனத்திற்குள் உள்ள அனைவருக்கும் ஸ்க்ரம் கோட்பாடு மற்றும் நடைமுறையப் புரிந்துகொள்ள ஸ்க்ரம் மாஸ்டர் உதவுகிறார்.

ஸ்க்ரம் டீமின் செயல்திறனுக்கு ஸ்க்ரம் மாஸ்டர் பொறுப்பு ஆவார். ஸ்க்ரம் கட்டமைப்பிற்குள் ஸ்க்ரம் டீமுனுடைய நடைமுறைகளை மேம்படுத்தி இயங்கச்செய்கிறார்.

ஸ்க்ரம் மாஸ்டர்ஸ் ஸ்க்ரம் டீம் மற்றும் நிறுவனம் சேவை செய்யும் உண்மையான தலைவர்கள் ஆவர்.

ஸ்க்ரம் மாஸ்டர் ஸ்க்ரம் டீமுக்கு பல வழிகளில் சேவை செய்கிறார், அவையாவன:

  • சுய மேலாண்மை மற்றும் கலப்புசெயற்பணி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல்
  • டெபினிஷன் ஆப் டன் என்ற வரையறைக்கு இணங்க உயர் மதிப்பு கொண்ட இன்கிரிமெண்ட்உருவாக்குவதில் ஸ்க்ரம் டீமுக்கு உதவுதல்
  • ஸ்க்ரம் அணியின் முன்னேற்றத்தில் உள்ள தடைகளை நீக்க காரணமாதல் மற்றும்
  • அணைத்து ஸ்க்ரம் நிகழ்வுகளும் நேர்மையான உற்பத்தித்திறன் மற்றும் காலக்கட்டுள்ளதாக நடைபெறுவதை உறுதிசெய்தல்

ஸ்க்ரம் மாஸ்டர் பிராடக்ட் ஓனருக்கு பல வழிகளில் சேவை செய்கிறார்:

  • பயனுள்ள பிராடக்ட் கோல் வரையறை மற்றும் பிராடக்ட் பேக்லாக் மேலாண்மைக்கான நுட்பங்களை கண்டறிய உதவுதல்
  • தெளிவான மற்றும் சுருக்கமான பிராடக்ட் பேக்லாக் பொருட்களின் தேவையை புரிந்துகொள்ள ஸ்க்ரம் டீமுக்கு உதவுதல்
  • ஒரு சிக்கலான சூழலுக்கான அனுபவவாத தயாரிப்பு திட்டமிடலை நிறுவ உதவுதல் மற்றும்
  • தேவைக்கேற்ப மற்றும் வேண்டப்பட்டால் பங்குதாரர்களின் ஒத்துழைப்பை வசதிப்படுத்துதல்

ஸ்க்ரம் மாஸ்டர் நிறுவனத்திற்குள் பல வழிகளில் சேவை செய்கிறார்:

  • ஸ்க்ரம் ஏற்பதில் நிறுவனத்தை வழிநடத்துதல், கற்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல்
  • நிறுவனத்திற்கும் ஸ்க்ரம் செயலாக்கங்களை திட்டமிடுதல் மற்றும் ஆலோசனை செய்தல்
  • ஊழியர்கள் மற்றும் பங்குதாரராகளுக்கு சிக்கலான வேலைகளுக்கான அனுபவாத அணுகுமுறைகளை புரிந்துகொள்ளவும், செயல்படுத்தவும் உதவுதல் மற்றும்
  • பங்குதாரர்கள் மற்றும் ஸ்க்ரம் டீம்களுக்கு இடையேயான தடைகளை நீக்குதல்

§