ஸ்க்ரம் அனுபவவாதம் (எம்ப்ரிசிசம்) மற்றும் லீன் சிந்தனைகள் மீது நிறுவப்பட்டுள்ளது. அனுபவவாதம் கூறுவது என்னவென்றால் அறிவு அனுபவத்திலிருந்து வருகிறது மற்றும் கவனித்தவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதை இது வலியுத்துகிறது. லீன் சிந்தனை கழிவுகளை குறைகிறது மற்றும் அத்தியாவசியங்களில் கவனம் செலுத்திகிறது.
ஸ்க்ரம் முன்கணிப்புத்திறனை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கும் – “மீண்டும் மீண்டும்” (ஈடேறட்டிவ்) மற்றும் “அதிகரிக்கும்” (இன்க்ரீமெண்டல்) அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. ஸ்க்ரம் கூட்டாக வேலை செய்ய அனைத்து திறன்களையும், நிபுணத்துவதையும் கொண்ட நபர்களின் குழுக்களை ஈடுபடுத்துகிறது மற்றும் தேவைக்கேற்ப அத்தகைய திறன்களைப் பகிரவும் அல்லது பெறவும் செய்கிறது.
ஸ்க்ரம் ஸ்பிரிண்ட்-என்கிற ஒரு நிகழ்வுக்குள் ஆய்வு மற்றும் தழுவலுக்காக நான்கு முறையான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வுகள் செயல்படுகின்றன, ஏனெனில் அவை வெளிப்படைத்தன்மை, ஆய்வு மற்றும் தழுவலின் அனுபவம் போன்றவை ஸ்க்ரம் தூண்களாக செயல்படுத்துகின்றன.
வெளிப்படைத்தன்மை (Transparency)
வேலையைச் செய்பவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் எழும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்திருக்க வேண்டும். ஸ்க்ரம்மின் முக்கியமான முடிவுகள் அதனுடைய மூன்று முறையான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். குறைந்த வெளிப்படைத்தன்மை கொண்ட ஆவணங்கள் தன்னுடைய மதிப்பை குறைக்கும் மற்றும் இடர்களை அதிகரிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
வெளிப்படைத்தன்மை ஆய்வுக்கு உதவுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஆய்வு செய்வது தவறானது மற்றும் வீணானது.
ஆய்வு (Inspection)
விரும்பத்தகாத மாறுபாடுகள் அல்லது குறைபாடுகளை கண்டறிய ஸ்க்ரம் ஆவணங்கள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அடிக்கடி விடாமுயற்சியுடன் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வுக்கு உதவுவதற்கு ஸ்க்ரம் ஐந்து நிகழ்வுகளை வழங்குகிறது.
ஆய்வு தழுவலை செயல்படுத்துகிறது. தழுவல் இல்லாத ஆய்வு அர்த்தமற்றதாக கருதப்படுகிறது. ஸ்க்ரம் நிகழ்வுகள் மாற்றத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தழுவல் (Adaptation)
ஒரு செயல்முறையின் எந்த அம்சங்களும் ஏற்றத்தக்க வரம்புகளுக்கு வெளியே விலகினால் அல்லது தயாரித்தபொருட்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால் பயன்படுத்தப்படும் செயல்முறை அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சரிசெய்யப்பட வேண்டும். மேலும் விலைகலைக்குறைக்க சீக்கிரம் செய்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரம் அல்லது சுயமேலாண்மை இல்லாதபோது, தழுவல் மிகவும் கடினமாகிறது. ஒரு ஸ்க்ரம் டீம் ஆய்வு மூலம் புதிதாக எதையும் கற்றுக்கொண்டால் அதே தருணத்தில் மாற்றியமைத்து தழுவ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.